நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதித்து டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 


 

இதற்கு முன்னதாக ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், பிப்ரவரி-01ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது முறையாக நாளையும் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


 

இந்த நிலையில், தூக்கில் போட மாட்டார்கள் என குற்றவாளிகளின் வழக்கறிஞர் சவால் விடுகிறார், தண்டனை அளிக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். அரசு அவர்களை தூக்கில் போட வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கண்ணீர் மல்க கூறியுள்ளது கல் மனதையும் கரைய வைத்துள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,