இது அனன்யா பக்கம் -- 4 வெப்சீரிஸ் பயமுறுத்தல்கள்

அனன்யா பக்கம்


 


சிரிக்க சிரிக்க மட்டும்,,,,


பகுதி ( 4 )


வெப்சீரிஸ் பயமுறுத்தல்கள்


 


ப்ரீ ட்ரயல் கொடுக்கறானேன்னு நெட்ஃப்ளிக்ஸை போட்டது தான்


 தாமஸம். தினோம் ஒரு சினிமை காணுகையாணு. நல்லார்க்கோ நல்லால்லையோ ஒரு நாளைக்கி ஒண்ணோ ரெண்டு பார்த்துடணும். இல்லாட்டா தெய்வக்குத்தம் ஆயிடும்ன்னு உக்காண்டு பொழுதன்னைக்கும் சினிமா கிறுக்கு. பெஸ்ட் போஜ்பூரி சினிமா ஆன் நெட்ஃப்ளிக்ஸ்ன்னு கூட தேடுவேன் போல்ருக்கு! என்னமோ ஒரு கம்பல்ஸிவ் அடம்பிடிச்சு சினிமா பாக்கற சூக்கேடு. (கஷ்டகாலம்)


  அதுல தத்துபித்துன்னு தெலுங்கு தமிழ்ன்னு பார்த்தது போக மெட்ரோன்னு ஒரு சினிமா. அதை பார்த்ததிலே இருந்து வயித்துக்குள்ளே ஒரே கிலி.


      சென்னை மாநகரத்துல எப்படி எப்படில்லாம் ப்ளான் பண்ணி செய்ன் ஸ்னாச்சிங் நடக்கறதுங்கற தெளிவா விளக்கிருக்காங்க. ஷ்ஷப்பா.. அதை பார்த்ததுலேந்து பீதியோட தான் தெருவுல இறங்கி நடக்க வேண்டியதா இருக்கு.


ஊர் சுத்திட்டு ராத்திரி எட்டு மணிக்கு பஸ்ஸ்டாப்லேந்து வீட்டுக்கு நடக்கற வழி. இவர் வண்டியை எங்கேயோ கொஞ்சம் தூரக்கபார்க் பண்ணிருக்கார். பாதி வழியில் என்னை பிக்கப் பண்ணிக்கறதா சொல்லிட்டு அடுத்த தெருக்குள்ளே வண்டி எடுக்க போய்ட்டார்.


 


           இருட்டு தெருக்குள்ள போக எனக்கான பயம். நேத்தி கூட ஆஃபீஸ் கிட்ட ஸ்னாக்ச்சிங் ச்சே சதா தீனி ஞாபகம், ஸ்னாச்சிங் சம்பவம் நடந்ததா கேள்வி. திடுக் திடுக்ன்னு நடக்க ஆரம்பிச்சேன்.


    அதெப்படி ஒருத்தர் கூட இல்லை தெருவுல? எட்டரைக்கே எல்லாரும் தூங்கியாச்சா?  ஏதோ zombie படமாட்டம் அதென்ன அப்படி ஒரு மயான அமைதி?


கட்டிட வேலை நடக்கறது இந்த பில்டிங்ல. எல்லாரும் பிரேக்ல போயிருப்பாங்க போல்ருக்கு இல்லே?


       இந்த வீட்டுல டிவி சவுண்டு கூட இல்லியே? ஊருக்கு போயிருப்பாங்களோ?


கழுத்துக்கு பின்னாடி ஏதோ காலடி சத்தம். காதெல்லாம் தீட்டிண்டு கேட்டேன். பீ கே ஸி ப்ரைடு மாதிரி இருக்கு. கரெக்டு. அதே தான்.


 


            திரும்பி பார்த்தப்போ கண்ணாடி போட்டுண்ட திருட்டு முழி இளைஞன், ஹூடி வைச்ச கருப்பு ஜெர்க்கின், ஜீன்ஸ் பேண்ட் பேக்பேக் சகிதம் பிகேசி செருப்பை போட்டுண்டு நடந்து வந்துண்டு இருக்கான். சபாஷ்டி அனன்யே, ப்யோம்கேஷ் பக்ஷி, ஷர்லாக் ஹோம்ஸ், மிஸ் ஃபிஷர்ஸ் மர்டர் மிஸ்ட்ரிஸ் பார்த்ததெல்லாம் வீணாகலைடி. நீ ஒரு பார்ன் டிட்டெக்டிவ் தான்.


            அதெப்படி அவ்ளோ துல்லியமா பிகேசின்னு கண்டு பிடிச்சே? அது ஏன் ஷாரகனா இருந்திருக்க கூடாது? அது வாய்ப்பில்லை ஏன்னா ஒரே நாளில் ஷாரா பிய்ஞ்சிருக்கும். இந்த பையனும் இதை நேத்து தான் வாங்கியிருக்கான். ஒரு சைஸ் சின்னது வேற. நடக்கும் போது கொஞ்சம் லிம்பிங் இருக்கு. காரணம் புது செருப்பு அவனை கடிச்சிருக்கு. இன்னும் நாலே நாள் தான் இதையும் பிய்ச்சுருவான். தேய்ச்சு தேய்ச்சு நடக்கறான் பார்


            . இவன் மதர் தெரஸா சரியில்லை. செருப்பை தேய்க்காதேன்னு பொள்ளேர்ன்னு பொடனில ஒரு அறை வைக்காம வளத்துட்டா போல்ருக்கு. யப்பா.. ஷெர்லக் அப்படியே எனக்குள்ள கூடு விட்டு கூடு பாய்ஞ்சு துல்லியமா சப்டைட்டில்ஸுடன் எல்லாம் என் கண் முன்னாடி வந்துடுத்து.


             என்ன ஒரு அறிவுடி உனக்கு? அசகாய சூரிடி நீன்னு எனக்கு நானே கொஞ்சம் அதிகமா ஐஸ் வைச்சுண்டு, அதிபுளகாங்கித சூக்ஷ்மபுத்தி சத்யான்வேஷின்னு அந்த நேரத்துல அந்த தெருவுல சமய சந்தர்ப்பம் எதுவும் பார்க்காம பட்டம் கொடுத்துண்டேன்.


               இந்த பையன் முகத்தை பார்த்தாலே திருட்டுக்களை சொட்றது. இடது பக்கம் நடந்துண்டு இருந்த நான் பின்னங்கழுத்து, காது ரோமம் எல்லாம் அலர்ட் ஆகி, எதுக்கும் இருக்கட்டும்ன்னு துப்பட்டாவால என் கழுத்தை நானே நெறிச்சுண்டேன். திடீர்ன்னு உயிர்பயம். ரொம்ப டைட் பண்ணிண்டுட்டேன் போல்ருக்கு. விர்ரா விர்ரான்னு கத்திண்டே கொஞ்சம் லூஸ் பண்ணிண்டேன்.
யாராவது பார்த்திருந்தா, இவளுக்கு ஏதோ ஸ்ப்ளிட் பெர்ஸனாலிட்டி டிஸாடர் போல்ருக்குன்னு நினைச்சுப்பா.


                 எதுக்கு லெஃப்ட்ல நடந்துண்டுன்னு எக்ஸ்ட்ட்ட்ரீம் லெஃப்டுக்கு போய் எச்சலை முழுங்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன். அந்த பையன் என்னையே முறைச்சு பார்த்துண்டு சைட்ல இப்போ நடந்துண்டு இருக்கான். வாடா வா.. செயினா அடிக்க பார்க்கற என்கிட்ட? அப்படின்னு வீரவசனம் பேசினாலும், ஹார்ட் பீட் எனக்கு இப்போ வாய்ல அடிச்சுண்டு இருக்கு. மாரியாத்தா மாரியாத்தான்னு நினைச்சுண்டே ஆஞ்சனேயர் ஸ்லோகம் எதாவது இருக்கான்னு மைண்ட்ல க்விக் செர்ச் விட்டேன் என் மூளையில்.


              நாலு மணிக்கு எழுந்துட்டு சாயங்காலம் நாலு மணிக்கெல்லாம் மூளை ஷட்டவுன் ஆகிடுறதே? உதட்டை பிதுக்கிடுத்து. முதல் நீ.. முடிவும் நீ.. சை.. என்ன தான் வேதகோஷம் மாதிரி கேட்டாலும் அது ஸ்லோகம் இல்லை, சினிமா பாட்டுடி அனன்யா.. அசடேன்னு மைண்ட் வாய்ஸ் திட்டித்து. இப்பத்தானடா     சத்யான்வேஷின்னு பட்டம்லாம் கொடுத்து பாராட்டு பத்திரம் தந்தேன்னு நான் கேட்டுண்டே இருக்கேன், அந்த மைண்ட் வாய்ஸ் பிசின்னு ஸ்டேட்டஸ் போட்டுட்டு செல்ஃப் டிஃபன்ஸ்ன்னு பழைய கம்பெனியில ட்ரெய்னிங் குடுத்தாங்களே, அதுல எதாவது ஞாபகம் வருதான்னு தேடப்போய்டுத்து.


              இவருக்கு பைக்கை வைக்க வேற இடமே கிடைக்கலையா? எங்க இருக்காரோ தெரியலையே? இன்னும் காணோம்?


            திடீர்ன்னு அந்த விகேசி பையன் வலது பக்கம் வந்த ரோட்டுல திரும்பி போய்ட்டான். ஓஹோ.. அப்போ அவன் ஹார்ம்லெஸ் தானா? அவந்தான் நம்மளை பார்த்து பயந்திருக்கான் போல்ருக்கு. ஃபோன்ல செல்ஃபி கேமராவை ஆன் பண்ணி பார்த்துண்டேன் என் திருமுகத்தை. புள்ளைபுடிக்கறவள் ஜாடையா இருக்கோமோ என்னமோ? செருப்பை தேய்க்காம நடராஜான்னு சொல்லலாம்ன்னு நினைச்சேன்.         நமக்கேன் வம்பு?


           கொஞ்சம் நிம்மதியோட திரும்பி பார்த்தப்போ ஒருத்தரையும் காணோம். ஹப்பாடா.. இனி நடந்து வீட்டுக்கு கூட போய்டலாம். ஏன் அனாவஸ்யமா பயந்துண்டுன்னு நினைக்கறதுக்குள்ளே எதிர்ல ஒருபைக். அந்த சினிமாவுல காட்டினாப்புலேயே ஒரு இளைஞன். அவன் ஹெல்மெட்டுல வேற ஃப்ளூரோசெண்ட்பச்சையில ஸ்கல் எல்லாம் வரைஞ்சு பயங்கரமா இருக்கு. மூஞ்சில துணி எதும் கட்டிண்டு இருக்கான்னு சுத்தமா பார்க்க முடியலை! ஒரு தெருவிளக்கில்லை.


          இவரை இன்னும் காணுமே! எங்கே போயிருப்பார். ஒரு வேளை ஷோரூம் போய் புது வண்டி எதும் வாங்கறாரோ? நியூ இயர்க்கு? என்னவா இருக்கும்?


இவன் வேற பைக், ஜெர்க்கின், ஹெல்மெட்.. சகுனமே சரியில்லையே?


இன்னும் எக்ஸ்ட்ட்ட்ட்ரீம் லெஃப்ட் பக்கமா போய்ட்டேனா.. இன்னும் கொஞ்சம் போனா, கேட் வுமன் ஹேலி பெர்ரி மாதிரி வீடுகளின் காம்ப்பவுண்டு மேலத்தான் ஏறி நடந்தாகணும்.


    சர்வ ஜாக்கிரதையா அவனை தூரக்க வைச்சுண்டு எக்ஸ்ட்ரீம் எதிர் திசையில அப்ரோச் பண்ணேன்.


        திடுக் திடுக் திடுக்.


                 “நான் இங்க வந்து அரை மணி நேரமாச்சுடி எவ்ளோ நேரந்தாண்டி ரெடியாவ”ன்னு யார்கிட்டேயோ கத்திண்டு இருந்தான். ஓ, கேள்ஃப்ரெண்டு பிரச்சினைகள். ஷப்பா.. இவன் அவன் இல்லைன்னு நினைச்சுண்டு நடையை கட்டினேன்.


   இப்போ முன்னாடியும் பின்னாடியும் தீவிரமா ஸி ஸி டிவி கேமரா மாதிரி நன்னா ஸூம் பண்ணி பார்த்துண்டே இருந்தேனா... கச்ச்சக்ன்னு ஒரு சவுண்டு.


    அடாடா.. பயந்துண்டே பராக்க பார்த்துண்டு லெஃப்ட் எக்ஸ்ட்ரீம்ல நடந்துண்டே ஏதையோ மிதிச்சுட்டோமே.. கர்மம் கர்மம்.


           இனிமே நெட்ஃப்ளிக்ஸ் பார்ப்பியா? பார்ப்பியா?


நல்ல வேளை ஒரு வழியா பைக்கை எடுத்துண்டு இவர் வந்ததும் அந்த த்ரில்லிங் நடைபயணம் நிறைவடைஞ்சது.


               ஆகையால நான் என்ன சொல்ல வர்றேன்னா.. எல்லாரும் குறிப்பா பெண்கள் அலார்ட் ஆறுமுகமா இருக்க வேண்டியது முக்கியம் . ஆனா அதுக்காக கண்டத்தையும் மிதிச்சுட வேண்டாம்.


             நல்ல வேளை நம்மூர்ல முன்னெல்லாம் பன்னிகள் தொல்லை அதிகம்ன்னு கேள்வி. இப்போ அதில்லை. அப்பர் சர்ஃபஸ் மட்டும் காய்ஞ்சு உள்ளூர லிக்விடா இருக்கற ஏதையோத்தான் மிதிச்சிருக்கோம்.


              இட்ஸோக்கேய்


--அனன்யா மகாதேவன்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,