முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீனா விஜயம்

சென்ற வருடம்  பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாட்டு கலாசார உறவுகள், வர்த்தகம், குறித்து பேச்சுவார்த்தை நடத்திய போது தமிழ்நாட்டின் கலாசாரம் அன்பான உபசரிப்பால் நெகிழ்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழக அரசை வெகுவாக பாராட்டி சீனா சென்றதும் தமிழக முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதினார்.

 

                   கடந்த மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் சீனா நாட்டு பிரதிநிதிகள் குழுவினர் சென்னைக்கு வந்து தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள். அதன் தொடர்ச்சியாக  தமிழக அதிகாரிகள் குழுவினர் சீனா சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஜுன் மாதம் சீனா சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதற்கான அனுமதியை வழங்கி சுற்றுப்பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க உள்ளது.

 

                   சீனாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள கலாசாரம், வர்த்தகம், போன்றவற்றைவலுப்படுத்தவும் அங்குள்ள முதலீட்டாளர்களை தமிழ்

நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீனா செல்கிறார் என அறிவிப்பு தெரிவிக்கிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,