ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி 2020



– 06.01.2020


திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


          மகாவிஷ்ணுவின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி நாளான இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இதனையொட்டி விடிய விடிய விழித்திருந்து உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி ஆலயங்களில் காத்திருக்கின்றனர்


          வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசலைக்கடந்து வந்து நம்பெருமாள் அனைவருக்கும் அருள்பாலித்தார்.


        விடிய விடிய கண்விழித்து காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா என்ற  முழக்கத்துடன் பரமபதவாசலை கடந்து சென்று நம்பெருமாளை வழிபட்டனர்.. அதிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்த வாசல், இன்று மட்டுமே திறக்கும். அதுவே, சொர்க்க வாசல் என அழைக்கப்படும். அந்த வாசல் வழியே சென்று இறைவனை பக்தர்கள் வழிபடுவார்கள்


    . வைகுண்ட ஏகாதசி தினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். பெருமாள் சொர்க்கவாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இதனைத் தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும்.


நம்பெருமாள் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் பகல்பத்து அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஆரியபடாள் வாசல்           சொர்க்கவாசல் திறப்பு வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பரமபரவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. அதிகாலை சரியாக 3.15 மணிக்கு ரத்ன அங்கி சேவையுடன் கிளி, மாலை அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 4.30 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்க வாசலை கடந்து சென்றார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரமபதவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து முத்துப்பந்தலில் நம்பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். இன்று இரவு வரை பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம்.


 ---சுமிதா ரமேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,