சென்னை விமான நிலையத்திற்குள் 5 திரையரங்குகள்
சென்னை விமான நிலையத்தில் 5 திரைகள் கொண்ட திரையரங்கை அமைக்க பிவிஆர். திரையரங்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பிவிஆர் திரையரங்கு நிறுவனம் இந்தியா முழுவதும் தனது அதிகளவு கிளைகளை பரப்பியுள்ள நிறுவனமாகும். இந்தியாவில் கிட்டத்தட்ட 584 பிவிஆர் திரையரங்குகள் உள்ளன.
தற்போது பயணிகள் விமானத்திற்காக காத்திருக்கும் நேரத்தை செலவிடுவதற்காக சென்னை விமான நிலையத்திற்குள் ஆயிரம் இருக்கைகள் கொண்ட 5 திரைகள் உடைய திரையரங்கை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இத்திரையங்கம் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது எனவும், அடுத்த ஆண்டு இத்திரையரங்கம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் பிவிஆர் அதிகாரி பிரமோத் அரோரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தைப்பார்க்கும் ஆவலில் விமானத்தை தவறவிடாமல் பயணிகள் இருக்கனும்
Comments