5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடர்பாக புதிய அறிவிப்பை தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பழனிசாமி வெளியிட்டார்.

 


 

நாடு முழுவதும் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் என்று சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்வுக்கான அட்டவணை, விதிமுறைகள் ஆகியவற்றை வகுத்து  இதில் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியில் அல்லாமல் வேறு ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.

 

   அதன்படி, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு உட்பட்டும், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளும் தேர்வு மையங்களை அமைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி இருந்தது.  மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேர்வெழுதும் சமயங்களில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று பலரும் தெரிவித்தனர்  ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

 

இந்நிலையில்,தற்போது பொதுத்தேர்வு எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 

இது தொடர்பாக  தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

 

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட மாட்டார்கள்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

முந்தைய இயக்குனர் வெளியிட்ட அறிக்கையை திருத்தி புதிய அறிவிப்பை  இயக்குனர் பழனிசாமி வெளியிட்டார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,