5 ஆயிரம் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தகம் வாசிப்பு


சென்னை புத்தக கண்காட்சி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

                  தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்(பபாசி) சார்பில் 43-வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 9-ந்தேதி தொடங்குகிறது. 21-ந்தேதி வரை 13 நாட்கள் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.வேலைநாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும்.

                    இந்த புத்தக கண்காட்சியின் முன்னோட்டமாக ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சியை ‘பபாசி’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடத்தியது. பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 5 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் புத்தகங்களை வாசித்தனர்.அதாவது பபாசி வழங்கிய புத்தகங்களை சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் தமிழில் வாசித்தனர்.
           . சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

     நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பங்களிப்பு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,