சாதனையில் சைக்கோ

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும்  வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி இப்படம் சென்னையில் மட்டும் ரூ 44 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ரூ 2.3 கோடி முதல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இன்னும் வார இறுதி நாட்கள் என்பதால் நிச்சயம் எதிர்பார்த்த வசூல் ஈட்டும் என கூறப்படுகிறது.
  இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே சூப்பர் ஹிட் அடித்தது. டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன் நல்ல வசூலை எட்டியுள்ளது. 

 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,