காந்தியடிகளின் வாய்மை மற்றும் அகி ம்சை படி நடப் பது நமது கடமை
இந்திய குடியரசு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை கூறி உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
70 ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 26-ந்தேதி நமது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. 1950-ம் ஆண்டில், இதே வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் இந்திய மக்கள் அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களின்பால் நமது நம்பிக்கையை வலியுறுத்தும் வகையில், ஒரு குடியரசாக நமது பயணத்தைத் தொடங்கினோம்.
அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26-ந்தேதி நாம் குடியரசுத் திருநாளைக் கொண்டாடுகிறோம். நமது அரசியலமைப்புச் சட்டம், சுதந்திரமான மக்களாட்சியின் குடிமக்கள் என்ற முறையிலே, சில உரிமைகளை நமக்கு அளிக்கிறது.
மக்கள் நலன் பொருட்டு, அரசு பல இயக்கங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களின் பங்களிப்பு காரணமாக, தூய்மை இந்தியா இயக்கம் மிகக்குறைவான காலத்தில், மெச்சத்தகுந்த வெற்றியைக் கண்டிருக்கிறது. பிரதம மந்திரி உஜ்வலா திட்டம் என்ற சமையல் கியாஸ் திட்டம் படைத்திருக்கும் சாதனைகள் பெருமிதம் கொள்ளத்தக்கவை.
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டமான சவுபாக்கியா திட்டம், மக்களின் வாழ்க்கையில் புதிய ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது. விவசாயிகள் கவுரவக் கொடை வாயிலாக 14 கோடிக்கும் அதிக விவசாய சகோதர சகோதரிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6,000 குறைந்தபட்ச வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக நமக்கெல்லாம் அன்னம் படைப்போர், கவுரவமாக வாழ உதவி கிடைக்கிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) சாதனைகள் நாட்டு மக்களான நம் அனைவரையும் பெருமிதம் கொள்ள வைக்கின்றன. இஸ்ரோ தனது ககன்யான் திட்டத்தில் முன்னேறி வருகிறது. இந்த ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் மேலும் விரைவு கதியில் முன்னேறுவதை நாட்டுமக்கள் மிகுந்த உற்சாகத்தோடும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
நாம் 21-ம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டிற்குள் கால் பதித்திருக்கிறோம். காலம் கடந்து செல்லச்செல்ல, நமது விடுதலைப் போராட்டத்தின் நேரடி சாட்சியாகத் திகழ்ந்தவர்கள் அனைவரும் நம்மை விட்டு மெல்ல மெல்லப் பிரிந்து சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது சுதந்திரப் போராட்டத்தின் நம்பிக்கைகள் என்றும் நீக்கமற நிறைந்து நிற்கும்.
தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் காரணமாக, இன்றைய இளைஞர்கள் வசம் பரந்துபட்ட தகவல்வளம் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் அவர்களிடம் தன்னம்பிக்கை நிரம்ப இருக்கிறது என்பதும் முக்கியமான ஒன்று. நமது அடுத்த தலைமுறையினர் நமது நாட்டின் அடிப்படை விழுமியங்களில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய இளைஞர்களிடத்தில் நான் புதிய இந்தியா உதயமாவதைக் காண்கிறேன்.
காந்தியடிகளின் வாய்மை மற்றும் அகி ம்சை தொடர்பான செய்தியின் படி நடப் பது நமது தினசரி வாடிக்கையாக வேண்டும். வாய்மை மற்றும் அகிம் சை பற்றிய அவரது செய்தி இன்றைய காலகட்டத்தில் அதிக முக்கி யத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
எந்த ஒரு குறிக்கோளுக் காகவும் போராடுவோர் குறிப்பாக இளைஞர்கள், காந்தியடிகள் அளித்திருக்கும் அகிம்சை என்ற மந்திரத்தை என்றும் மறவாமல் வைத்திருக்க வேண்டும். ஏனெ ன்றால் மனித சமூகத்துக்கு இதுவே விலைமதிப்பில்லாத கொடை யாகும் என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.
Comments