சென்னை - கோவை இடையே 68 சிறப்பு ரெயில்கள்

சென்னை - கோவை இடையே இயக்கப்படவுள்ள 68 சிறப்பு ரெயில்கள் குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


 


சென்னை- கோவை வழித்தடத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 68 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை - கோவை இடையே 2 குளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டிகளுடன் கூடிய சிறப்பு ரெயில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 


 


டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரெயில், மதியம் 12.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 2 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 9.45 மணிக்கு கோவை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,