பறவைகள் கணக்கெடுப்பு

*தமிழ்நாடு வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணியினை கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் மேற்க்கொண்டனர்...*
*கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம், தத்தையார்குளம் சுசீந்திரம், தேரூர்,மாணிக்கபுத்தேரி,ராஜாக்கமங்கலம்,சுவாமிதோப்பு,மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பறவை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது..*
*வருடம் தோறும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 20,000 க்கும் மேற்ப்பட்ட வெளிநாட்டு பறைவைகள் வருகிறது.*
*பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம் அது போல் இந்த வருட ஆரம்பத்தில் நடைப்பெற்றது..*
*இன்று ஒரு நாள் மட்டும் 60 வகையான பறைவை இனங்கள் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம்,மணக்குடி பகுதியில் வந்துள்ளது.சராசரியாக 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் குமரிமாவட்ட நீர் நிலைகளுக்கு வருவதுண்டு. குறிப்பாக வெளிநாட்டு பறவைகளான கிரேட்டர் பிளம்மிங்கோ, பார்டேல் காட்விட்,பேன் ஸ்டாயில்,போன்ற பறவை இனங்கள் புதிய வரவாக உள்ளது...பொதுவாக கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளான மணக்குடி புத்தளத்தில் உப்பளம் நீர் நிலைகள் மற்றும் நல்ல நீர் நிலைகளில் மீன்கள், பூச்சிகள் போன்றவைகள் இருப்பதால் அதிகளவில் புதிய வகை பறவைகள் வருகின்றன.....பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை குமரிமாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த தலைமையில் நடைபெற்றது....*


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,