ரஜினி வந்து எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை

பெரியார்- ரஜினி' விவகாரத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள் தற்போது வெளிப்படையாகக் கருத்துச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்


     . மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஊராட்சிப் பதவிகளுக்குப் புதிதாக வந்தவர்களுக்கு நிர்வாகத் திறன் குறித்தும், வளர்ச்சி திட்டப் பணிகளைக் கையாள்வது என்பது பற்றியும் நடந்த விளக்கக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். 


அப்போது  செய்தியாளர்களிடம் பேசியவர், ``சமூக நீதியில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி அதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இணைத்தவர் ஜெயலலிதா. இப்படி சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது அன்னைத் தமிழகம். அதற்கு வித்திட்ட்டவர்கள் தந்தை பெரியார், அவர் வழியில் வந்த அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும் சமூக நீதிக்காகப் போராடியவர்கள்.


                     அவர்களுடைய கொள்கைகளை ரஜினி வந்து எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் தர்பார் படத்தோடு நிற்காமல் தமிழ் நாட்டிலும் தர்பார் நடத்த நினைக்கிறார்.


              அது தர்பார் படம் போல எங்கே கொண்டு போய் என்ன தீர்ப்பைத் தரும் என்பதை உங்களைப்போல நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.


 


இங்கு எல்லோரும் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் முதலமைச்சர் நாற்காலி காலியாக இல்லை. அது அண்ணன் எடப்பாடியிடம்தான் இருக்கிறது. உழைக்கும் வர்க்கத்திலிருந்து ஒரு விவசாயியின் மகனான அவர் எந்தப் பந்தைப் போட்டாலும் சிக்சர் அடித்து வருகிறார்.


ரஜினியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மன்னிப்பு கேட்டிருக்கலாம், பேசியதற்கு வருத்தம் தெரிவித்திருக்கலாம். எத்தனை ரஜினி வந்தாலும் பெரியார் புகழை மறைக்க முடியாது'' என்றார்


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,