நீங்க முடியாத ராஜா
சைக்கோ படத்தின் இரண்டாவது பாடலை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் மிஷ்கின் தற்போது சைக்கோ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். அவருடன் நித்யா மேனன், அதிதி ராவ் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் உன்ன நெனச்சு என்ற முதல் பாடலை வெளியிட்டிருந்த படக்குழுவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது 'நீங்க முடியுமா’ என்ற 2-வது பாடலை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.
கபிலன் எழுதியிருக்கும் இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடலின் வரிகளும் இசையும் காதலைப் பேசி மனதைப் பிழிகிறது
Comments