ஆக்சிஸ் பேங்க்கில் என்ன நடக்கிறது


                            கடந்த சில மாதங்களில், குறைந்தது 15,000 ஆக்சிஸ் பேங்க் ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். நடுத்தர மற்றும் கிளை அளவிலான நிர்வாகிகள் இவ்வாறு ராஜினாமா செய்தவர்களில் கணிசமானோராக உள்ளனர். சீனியர் மட்டத்திலும் சிலர் ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் பெரும்பாலான ராஜினாமாக்கள் வாடிக்கையாளர்களுடனான முக்கிய தொடர்பு புள்ளிகளாக கருதப்படும், கிளை அளவிலான நிர்வாகிகள் மட்டத்தில் நடந்துள்ளது. இது வாடிக்கையாளர் சேவையை வெகுவாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.


  


  வங்கி சார்பில், புதிதாக பணியாளர்களை நியமிக்க உள்ளதாக கூறுகிறது. வங்கி தனது பணித்திறனை மாற்றியுள்ளது. இது பழைய தொழிலாளர்களுக்கு அசவுகரியத்தை கொடுத்திருக்கும். எனவே, அவர்கள் பணியிலிருந்து விலகியிருப்பார்கள் என்கிறது ஆக்சிஸ் பேங்க் வட்டாரம்.  ‘


                          கடந்த சில மாதங்களில் அதிக அளவில் ராஜினாமாக்கள் நடந்தது என்பதை ஆக்சிஸ் வங்கி ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால் இந்த நிதியாண்டில் ஏற்கனவே 28,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும், வரும் காலாண்டில் மேலும் 4,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளதாகவும், ஆக்சிஸ் வங்கி கூறியுள்ளது. வங்கி திட்டம் இந்த நிதியாண்டில் வங்கி புதிதாக 12,800 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 30,000 பேரை வேலைக்கு அமர்த்தவும் ஆக்சிஸ் வங்கி திட்டமிட்டுள்ளது. 


                  இந்த நிதியாண்டில் வங்கியின், வருவாய் விகிதம் கிட்டத்தட்ட 19% ஆகும். ஆக்சிஸ் வங்கியின் சராசரி வளர்ச்சி விகிதம் 15%. எனவே, இந்த ராஜினாமாக்களால் வங்கி பணிகளில் பிரச்சினை இதுவரை இல்லை என்பது தெரிகிறது. ஆக்சிஸ் வங்கியில் 72,000 ஊழியர்கள் உள்ளனர். இது கடந்த நிதியாண்டில் 11,500 பேரை புதிதாக வேலைக்கு அமர்த்தியிருந்தது. வங்கி சேவை விரிவடைகிறது இதுகுறித்து வங்கியின், நிர்வாக இயக்குனர் ராஜேஷ் தஹியா கூறுகையில், "வங்கி வேகமாக விரிவடைந்து வருகிறது, இது அதிக எண்ணிக்கையிலான புதிய வேலைவாய்ப்புகளின் ஆண்டாகும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மொத்த மற்றும் நிகர அடிப்படையில் வளர்ச்சி அதிகம்" என்று தெரிவித்தார். "எங்கள் ஊழியர்கள் எங்கள் மிகப்பெரிய சொத்து" என்றும் அவர் தெரிவித்தார்



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி