திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் , காவல்துறை, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சார்பில் சாலை பாதுகாப்புவாரவிழா
திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் , காவல்துறை, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சார்பில் சாலை பாதுகாப்புவாரவிழா, இன்சூரன்ஸ் விழிப்புணர்வு மற்றும் இலவச ஹெல்மெட் வழங்கும் விழா காமராஜர் சிலை அருகில் நடந்தது.
ரோட்டரி தலைவர் சற்குணநாதன் தலைமை வகித்தார், நாகை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோட்ட மேலாளர் கணபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் .போலீஸ் டிஎஸ்பி பழனிச்சாமி இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி பேசும்போது சாலைவிதிகளை பின்பற்றி செல்லவேண்டும் பைக் ஒட்டுபவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் , காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிந்து செல்லவேண்டும் , சாலை சந்திப்புகளில் கவனமாக செல்லவேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை விளக்கி பேசினார். இதில் காவல்துறையினர் , ரோட்டரி சங்கம் , நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments