நாடே போர்க்களமாக மாறிவிட்டது

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா , பஞ்சாப் , ராஜஸ்தான் சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்தி  தீர்மானம் நிறைவேற்றியுள்ளது .அதனை முன் உதாரணமாக கொண்டு தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்து சட்டசபையில் திமுக கொண்டுவந்த தீர்மானம் பேரவை தலைவர் தனது ஆய்வில் இருப்பதாக தெரிவித்துள்ளார் .வரும் சட்டசபை கூட்டத்தில் அந்த தீர்மானத்தை முன் மொழிந்து ஆளுங்கட்சி , எதிர்கட்சி என்று பேதமில்லாமல் நிறைவேற்ற வேண்டும் .நாட்டில் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்குடி , பொருளாதார மந்தநிலை, வேலையின்மை அதிகரிப்பு , தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளர்கள் வெளிபேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் குடியுரிமை திருத்த சட்டங்களால் பிரச்சினைகளை திசை திருப்புவது மட்டுமல்ல , ஆர்எஸ்எஸ் சொந்த கொள்கையை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தை பாஜக தவறான முறையில் பயன்படுத்துகிறது. இது பல எதிர்விளைவுகளை உருவாக்கும். இதை எதிர்த்து போராடும் மக்கள் மீது அடக்குமுறை தமிழகம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. ஏறத்தாழ 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 60,000 பேருக்குமேல் வழக்குபதிவு செய்துள்ளனர். வேறு பல மாநிலங்களிலும் வழக்குபோடப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ் போன்ற திரைத்துறையினர், எழுத்தாளர்கள் பலரும் மிரட்டப்படுகின்றனர் அச்சுறுத்தப்படுகின்றனர் . நாடே ஒரு போர்க்களமாக பாஜா மாறியிருக்கிறது .ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ் நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தக்கூடாது என மாதக்கணக்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது மக்கள் எந்த திட்டத்தையும் விரும்பாதவரையில் எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தது அதற்கு மாறாக தற்போது அதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் கருத்துகளை கேட்க வேண்டும் என்று இருந்த விதி நீக்கப்பட்டுள்ளது. அதே போல் சுற்றுச் சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதியும் நீக்கப்படுள்ளது. இது இல்லாமல் செயல்படுத்தலாம் என்று ஒப்புதல் அளித்திருப்பது  வன்மையாக கண்டனத்திற்குரியது. புதுக்கோட்டை ,தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்களில்  குடியரசு தினத்தன்று இதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமசபை தீர்மானத்திற்கு மத்திய மாநில அரசுகள் உரிய மதிப்பளிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.


செய்தியாளர்: பாலா திருத்துறைப்பூண்டி 


புகைப்படம் :அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,