குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 71வது குடியரசு தினத்தினை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பினை ஏற்று கொண்டார்.
நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் குடியரசு தின சிறப்பு விருந்தினரான பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ பங்கேற்றார். இதேபோன்று பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், பிற துறைகளை சார்ந்த மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் கவுர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Comments