ஏசி பேருந்து சென்னையில்
ஒரு இடைவெளிக்குப் பின்னர் மாநகர போக்குவரத்துக் கழகம் மீண்டும் ஏ.சி பேருந்துகளை இயக்கி உள்ளது. கோயம்பேடு - வேளச்சேரி (தடம் எண்:570) மற்றும் திருவான்மியூர் - தாம்பரம் (தடம் எண்:91) ஆகிய தடங்களில் தற்போது ஏசி பேருந்து இயக்கப்படுகிறது.
சமீபத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தலா ₹36 லட்சம் மதிப்பு கொண்ட 48 பேருந்துகளை வாங்கியுள்ளது. விரைவில், மேலும் 5 வழித்தடங்களில் ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சென்ட்ரல் - திருவான்மியூர், தி.நகர் - கேளம்பாக்கம், கோயம்பேடு - வண்டலூர், கிழக்கு தாம்பரம் - திருவான்மியூர், பிராட்வே - கேளம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் இந்த ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
குறைந்தபட்ச கட்டணமாக ஏசி பேருந்தில் ரூ.15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.60 கட்டணமாக உள்ளது. 2018-ல் இயக்கப்பட்ட வால்வோ ஏசி பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.28 இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments