தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடைபெறும்

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரியும், குடமுழுக்கிற்கு தடை விதிக்க கோரியும் ஐகோர்ட்  மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடைபெறும் என தெரிவித்தார்.


 


 

இதைத் தொடர்ந்து குடமுழுக்கு எந்த மொழிகளில் செய்யப்படும் என்பதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

 

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,