சிறைக்கு செல்ல தயாராகுங்கள்


ஜபல்பூரில் நடைபெற்ற பேரணியில் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக அமித் ஷா பேசினார். அப்போது, ‘‘நாட்டுக்கு எதிராக தேசவிரோத முழக்கங்கள் எழுப்புபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்!’’ என்று பேசியுள்ளார். மேலும், "நான்கு மாதங்களில் வானுயர ராமர் கோயில் கட்டப்படும். சில மாணவர்கள் தேச விரோத முழக்கங்களை எழுப்புகிறார்கள். யார் தேச விரோத முழக்கங்கள் எழுப்பினாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. ராமர் கோயில் கட்டப்படுவதைத் தடுத்துப் பாருங்கள் என காங்கிரசுக்கு சவால் விடுகிறேன். சி.ஏ.ஏ-வில் குடியுரிமையைப் பறிக்கும் ஒரு பிரிவை எதிர்க்கட்சிகள் குறிப்பிடட்டும். 


"காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், தேசத்தைத் தவறாக வழிநடத்தி சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகின்றன. காங்கிரஸ் கட்சிதான் நாட்டை மதரீதியாகப் பிளவுபடுத்தியது. அங்கு, பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி காங்கிரஸ் கட்சி ஏன் பேச மறுக்கிறது. பா.ஜ.க கொண்டுவருகிற அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்றே காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தான் மற்றும் இம்ரான் குரலாகப் பேசுகின்றன. மக்களின் எண்ணங்களை சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டால், காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக அழிந்துவிடும்" என்றார்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,