இது அனன்யா பக்கம் கண்ணுக்கு மையழகு

இது அனன்யா பக்கம்


 


சிரிக்க சிரிக்க மட்டும்,,,,


 பகுதி  (2 )


கண்ணுக்கு மையழகு...


         அதான் அந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் இருக்கே, அதை இன்னைக்கு திறந்து வைச்சுண்டு கூர்ந்து கவனிச்சேன்.
வித விதமான காஸ்மட்டிக்ஸ்.. அடடா.. இதெல்லாம் நம்ப கிட்டே இருக்கான்னு அதிசயிச்சேன்.
      எனக்கு மேக்கப்பு ஐட்டங்கள் அவ்ளவா தெரியாது. கன்ஸீலர், கண்டன்ஸர், ஹைலைட்டர், லோலைட்டர் இதெல்லாம் கிடையாது. ஆனா இருக்கற ரெண்டே ரெண்டு கண்ணுக்கு எட்டு நூறு வகையறா கண்மை ஒரு டப்பால சமாதி ஆகி இருக்கு. ஆஹா.. பேனா, ஸ்கெட்சு, ஜெல், லிக்விட், பால் பாயிண்டு, வேக்ஸ் இன்னும் என்னமோ ஐ பென்ஸில்ஸ்
ராஜகுலோத்துங்குவை விட்டு விட்டாரய்யாங்கற மாதிரி மூடி போட்ட கூம்புக்காஜல் டைப்பும் அதுடைய ஒண்ணு விட்ட சித்திப்பாட்டியுமாகிய ஐடெக்ஸ் ப்ளாஸ்டிக் குச்சியோட கண்மை வேற. கடவுளே!


(இனிமே யார்கிட்டேயாவது நான்லாம் ஒரு மினிமலிஸ்டுன்னு மட்டும் நீ சொல்லிப்பாரேன்.. உனக்கிருக்குடி அனன்யே சங்குன்னு ஹெவியா மிரட்டல் விட்டுத்து மைண்ட்வாய்ஸ்)


     சர்த்தான், உருப்படியான பல வேலைகளை எல்லாம் வழக்கம் போல அம்போன்னு விட்டுட்டு இதை சமாதியான டப்பாவை எடுத்து வைச்சுண்டு உக்காந்தாச்சு.


   நீளமா அடர் ஊதா.. இது என்னவா இருக்கும்ன்னு குப்புற படுத்துண்டு காலை ஆட்டிண்டே செந்தில் மாதிரி தாடைல விரல் வைச்சுண்டு ஆகாசத்தை பார்த்துண்டு ஆழ்ந்து ரோசனை செஞ்சுண்டு இருந்தேன்.
கொஞ்ச நேரம் டைம்பாஸ் ஆச்சு. சரின்னு திறந்து பார்த்தா, ஊக்கே இல்லாத மொட்டை பென்ஸில். இதை இப்பிடியே விடக்கூடாதுன்னு மனசுல சங்கல்பம் செஞ்சுண்டேன்.
   அந்த பென்ஸில் ஷார்ப்பனார் (அது ஷார்ப்பனாரும் இல்லை, மூப்பனாரும் இல்லை, ஷார்ப்பெனர், செல்லும்போது சின்ன வயசுலேந்து எப்படி சொல்றோமோ அப்படித்தான் சொல்லணும். அது தான் ஸ்லாக்கியம்) ஷார்ப்பனார் தேடி செம்ம டைம்பாஸ். தேடினப்போ நாலு கிடைச்சது. (ஷார்ப்பனாரே நாலான்னு வாயைப்பிளக்கறவங்க, தயவு செஞ்சு கிளம்புங்க. எட்டு நூறு பென்ஸில் வகையறாக்களுக்கு குறைஞ்சபட்சம் நாலு ஷார்ப்பனார் வேண்டாமா? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?)


சீவிட்டு பார்த்தப்போ எழுதவே இல்லை ஊக்கு. ஊதா ஊக்கு ஊ ஊஊ தான் போல்ருக்கு. சோடமுத்தான், போச்சா?


          சரின்னு அடுத்ததுக்கு போனேன். இப்போ ஸ்கெட்ச்சு. இடது புறங்கைல எழுதி பார்த்தேன். ஒரு சின்ன பிசிறு கூட இல்லாம துல்லியமா... ஒண்ணுமே எழுதலை. எதுக்கு இதெல்லாம் இன்னும் வைச்சுண்டு? ஊதாக்கலர் ஊ ஊ வோட சேர்த்து இதையும் போட்டுர்லாம். வெய்ய்ய்ய்ட்ட்.. அந்த மேக்கப் டுட்டோரியல்ல அந்த பொண்ணு என்ன செஞ்சா? என்ன செஞ்சான்னேன்? அந்த ஸ்கெட்ச்சு ஊக்குவை திருப்பி, கீழ் மேல் மாத்தி போட்டு எழுதினப்போ மைய்யா கொட்டித்தே? அப்படி செஞ்சு பார்த்தா என்ன? அவ ட்வீஸரோ ஏதோ ஒண்ணு வைச்சுண்டு பண்ணினா. நாம இப்போ டிஷ்யூ கூட எடுத்துக்காம அதெல்லாம் பண்ணணுமா? இல்லே இல்லே, பண்ணீர்லாம் பண்ணீர்லாம்ன்னு தலைவன் பேஸ்வாய்ஸ்ல சொன்னாப்புல இருக்கவும் சரின்னு ஒத்துண்டு மாத்தி போட்டப்போ ரெண்டு லாரி நிறைய மசி.. உள்ளங்கை புறங்கை முழங்கை எல்லாம் மசி கரை புரண்டு ஓடித்து. ஆனா கடைசில செம்மத்தியா எழுதித்தே. அது போறும்..
ஆக, ஒண்ணு உருப்படி. அப்படியே லைட்டா கண்ல போட்டுப்பார்த்தேன். கதகளி ரூபம். ஐபென்ஸிலா பெயிண்ட் பிரஷ்ஷான்னு குழம்பற அளவுக்கு பட்டை பட்டையா மை. பத்துக்கு கார்டு போடுறாப்புல கண்ணோரமா பெரிய பெரிய ஈஷல் வேற. அந்த மேக்கப் ரிமூவர் வேற அரை லிட்டர் வாங்கி வீணாப்போறது. இப்போவாவது போட்டுண்டா உபயோகம். இல்லாட்டா அதும் எக்ஸ்பயர் ஆகிடும். எல்லாத்தையும் அழிச்சுட்டு கண்ணாடி பார்த்தப்போ கிளியோபாத்ரா தோற்கும் அளவுக்கு அழகா தெரிஞ்சேன்னா பாருங்களேன்?


          ஜெல் எடுத்தப்போ கெட்டியா கொல்லையில் தேய்க்கப்போட்ட கரிச்சட்டி மாதிரி பல்லிளிச்சது ஜெல்டால். (அதான் டாலிங் ஷார்ட் ஃபார்ம்) இதை எப்படி ஒக்கிட்டலாம்ம்னு யோசிச்சப்போ மைண்ட்வாய்ஸே உதட்டை பிதுக்கிடுத்து. போட்டுர்லாம் போட்டுர்லாம்.


          இப்பெல்லாம் ஊதா மாதிரி பச்சை, பீக்காக் ப்ளூ, க்ரே, வெள்ளை இப்படி பலப்பல கலர்ஸ்ல வருதாம் ஐபென்ஸில்ன்னு குதூகலிச்சப்ப்பொ மை வா முறைச்சது. இதையே ஒழுங்கா இட்டுக்க துப்பில்லை இதுல இவளுக்கு ரெய்ன்போ கலர்ஸ்.


           அந்த மேபிலின் வால்யூம் மஸ்காராவை ஒரு தடவை போட்டுண்டு போய்ட்டு வெய்ட்பார்த்தா ஐஞ்சு கிலோ கூட இருக்கேன். ஏற்கனவே ரொம்ப அழகு. இதுல ஐ லாஷஸுக்கென்ன வால்யூம். மண்டையில பார்த்தா முடியே காணோம். கண் ரெப்பையில curl இருந்தா என்ன இல்லாட்டா என்ன? அதுக்கு volume ஒரு கேடு! சை, வேண்டாம். போட்டுர்ர்லாம் போட்டுர்லாம்


            இன்னொரு பென்ஸிலை ஓப்பன் பண்ணிட்டு பார்த்தா ஊக்கு என்னமோ படு வேகமா முந்துங்கள், இச்சலுகை இன்றே முடிவடைகிறதுன்னு யாரோ அசரீரில சொன்னாப்புல படு ஸ்பீடா வெளியேறி பொத்துன்னு கீழே விழுந்து பிராணனை விட்றுத்து. அதுவும் போச்சா? கலர் பார்ன்னு போட்ருக்கு? ராப்பர்லேந்து விழற சாக்கலேட் பார் மாதிரி தொபுக்கடீர்ன்னு விழுந்துட்ச்சே? க்யா கரூன் மைன்?


        சிமிண்டுக்கலர்ல ஒரு பென்சில். திறந்து பார்த்தா ஊக்கு தேய்ஞ்சுடுத்து. சரின்னு சீவிட்டு பார்க்கறேன் பிரமாதமா எழுதறது. வாவ். எடுத்து வைக்கலாம். கண்ணுக்கு மேல எழுதிக்கலாம்.


        ஒரு பெரிய கம்பெனியின் பென்ஸிலை கண்ல போட்டுண்டப்போ சுர்ன்னு தீயை வைச்சாபுல எரிச்சல். செத்துப்போயிருக்கும்.


          ரொம்ப அழகு ஏற்கனவே, இதுல எலக்ட்ரிக் ப்ளூ லைனர் வேற!ராமர் பச்சை, கடல் பச்சை, இப்போ நம்ம கிட்ட இல்லாத ஒரே கலர் கிளிப்பச்சை ஃப்ளூரோஸெண்ட் லைனர் மட்டுந்தான். அதையும் இந்த க்ஷணம் நைக்காவுல தேடினா கிடைச்சுடும் (ஆக்சுவல் ப்ரைஸ் - 199/-, இப்போ ஆஃபர் ப்ரைஸ் 209/-ன்னு வெட்கமே இல்லாம போட்ருப்பான், நானும் ஓடிப்போய் ஆடர் பண்ணுவேன், கர்மம்)


           இதென்ன குட்டி பாட்டில்? இதுவும் ஐலைனரா? கடவுளே.. திறந்து பார்த்தா ஒரு சொட்டு லிக்விட் இல்லை. ஸஹாரா பாலைவனம் மாதிரி வறண்டு கிடக்கு? போட்டுர்லாம் போட்டுர்லாம்.
இப்படி எல்லாமே பிராண்டட் ஐட்டங்கள். எல்லாமே அனேகமா காலி ஆன நிலையில், அனேகமா (சில வருடங்களுக்கு முன்) எக்ஸ்பயர் ஆன நிலையில் எல்லாத்தையும் போட்டுர்லாம் போட்டுர்லாம்ன்னு முடிவு பண்ணினேன்.


           செளகரியமா செந்தில் போஸ்ல படுத்துண்டு இதெல்லாம் sort out பண்ணிண்டு இருந்தேனா, முதுகுல தொம் தொம்ன்னு யாரோ ட்ரம்ஸ் வாசிக்கறாங்க. யாருன்னு நிமிந்து பார்த்தா மதர் தெரஸா.
“மை வாங்காதே மை வாங்காதேன்னு சொன்னா கேட்கறியா? இப்போ பார்.. ஊர்ல ஒரு கடையில் மை கிடைக்கலையாம். பூரா மையும் உன் கிட்ட தான் இருக்கு”ன்னு அர்ச்சனை, அஷ்டோத்திர சத நாமாவளி. 


           எல்லாம் முடிஞ்சு கண்ணை கசக்கிட்டு மதர் தாடகாவை அடிபட்ட பார்வை பார்த்தப்போ, ”ஹை, இப்போ என்ன போட்டுண்டு இருக்கே கண்ல? இவ்ளோ நல்லார்க்கே?”ன்னு கேட்டாங்க.


             நான் அந்த குட்டி ஐட்டெக்ஸ் டப்பாவை எடுத்து காமிச்சேன். ”இதையும் விட்டுவைக்கலையா நீ?”ன்னு மறுபடியும் முதல்லேந்து மொத்த ஆரம்பிச்சுட்டாங்க. ”நவராத்திரிக்கு ஜிஃப்டு கிடைச்சதும்மா”ன்னு நான் கத்தறது பட்டாசு சத்தத்துல மதர் காதுல விழுந்தாத்தானே?


என்னமோ போடி, ஓட்டை வாய்டி அனன்யே உனக்கு


 


---அனன்யா மகாதேவன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,