மன்னிப்பு கேட்ட போப்
போப் பிரான்சிஸ் வாட்டிகன் நகரத்தின் மையத்தில் உள்ளூர் மக்களைப் பார்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சென்றபோது ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அங்கே அவர் கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து கை அசைத்தபடி ஒரு குழந்தையை தொட்டு ஆசிர்வதித்தார். பின்னர், கூட்டத்தைவிட்டு விலகி செல்லும்போது, கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண் திடீரென போப்பின் கைகளைப் பிடித்து இழுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத போப், அந்த பெண்ணின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக அந்த பெண்ணின் கைகளை லேசாக அடித்து தட்டிவிட்டார். இந்தக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். சில நேரங்களில் நானும் பொறுமையை இழந்து விடுகிறேன் எனவும் போப் பிரான்ஸிஸ் தெரிவித்தார்.
Comments