தேசிய வாக்காளர் கள் விழிப்புணர்வு பேரணி திருத்துறைப்பூண்டி


திருத்துறைப்பூண்டியில் தேசிய வாக்காளர்தினத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை  வட்டாட்சியர் ராஜன்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார் .


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்றைய தினம் திருவாரூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை வட்டாட்சியர் ராஜன்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார் .இதில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு மாணவ,மாணவிகள் பேரணியில் ஈடுபட்டனர் .


இப்பேரணி  ரயில் நிலையம்  பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது இப்பேரணியில் அலுவலர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,