நட்டா புதிய தலைவர்
பா.ஜ.கவின் தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு ச
பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதல்முறையாக பதவியேற்ற போது உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜுலை மாதம் பா.ஜ.கவின் தலைவராக அமித் ஷா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு 2வது முறையாக பதவியேற்ற போது, அமித் ஷா உள்துறை அமைச்சரானார். இதைத் தொடர்ந்து பா.ஜ.கவின் செயல்தலைவராக ஜே.பி. நட்டா கடந்த ஜுன் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பாஜகவின் தலைவர் பதவிக்கானத் தேர்தல் நடைமுறைகளை அக்கட்சி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி.நட்டாவின் பெயரை, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் முன்மொழிந்தனர்.
வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தவுடன், ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வரும் 22-ம் தேதி கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக ஜே.பி. நட்டா பதவியேற்றுக் கொள்ள உள்ளதாகவும், இதனை பிரமாண்ட விழாவாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments