கடுமையான குளிரிலும் தலைநகரில் குடியுரிமை போராட்டம்
புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்க, தலைநகர் டெல்லியில் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கு பெற்றனர்.
தெற்கு டெல்லி சஹீன் பாக் பகுதியில் நடக்கும் இந்த போராட்டங்களை பெண்களே முன்னெடுத்துச் செல்கின்றனர். 18-வது நாளாக அங்குப் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. பெண்கள் இரவு பகலாகப் போராட்ட களத்தில் இருக்கின்றனர்.
Comments