அரவிந்த் கிருஷ்ணா ஐ பி எம் புதிய தலைவர்

108 ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகில் அசைக்கமுடியாத நிறுவனமாக திகழ்கிற ஐ.பி.எம் நிறுவனதின்  தலைமை செயல் அதிகாரியாக இருந்த கின்னி ரோமேட்டி பதவி விலகும் நிலையில், அவரது இடத்திற்கு இந்தியாவை சேர்ந்த 57 வயதான அரவிந்த் கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கான்பூர் ஐ.ஐ.டி பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம்பெற்ற அவர், 1990 ஆம் ஆண்டு டாக்டரேட் பட்டம் பெற்ற இவர் 

அதே ஆண்டே ஐ.பி.எம் நிறுவனத்தில் சேர்ந்து சுமார் 30 ஆண்டுகாலம் அந்நிறுவனத்தின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி, கடந்த ஆண்டு முதல் ஐபிஎம் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருளுக்கான  மூத்த துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த கின்னி ரோமேட்டி பதவி விலகும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் அரவிந்த் கிருஷ்ணா தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,