இனியஉதயம் தொண்டு நிறுவனத்தில் முப்பெரும் விழா

ஆவடி ஜன 26, இனியஉதயம் தொண்டு நிறுவனத்தில் இன்று முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் 17 வது துவக்க விழா,குடியரசு தின விழா மற்றும் துணி நாப்கின் பேட் யூனிட் திறப்புவிழா காலை 11.30க்கு ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் திருமதி.கோமளா தலைமையில் திரு.ஹரிஷ் குமார் முன்னிலையில் சிறப்பாக நடைப்பெற்றது.


 



 


 


இந்த முப்பெரும் விழாவின் சிறப்பு விருந்தினராக திருமதி.சைலஜா நடராஜன் அவர்கள் துணி நாப்கின் பேட் யூனிட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, திரு.நடராஜன்(Wheels india), திரு.சண்முகம்(Bro.Siga,Aarvam) திரு.பரமசிவம்(Bro.Siga,Aarvam),    திரு.பொற்செழியன்(Bro.Siga,Aarvam) ஆகியோர்கள் குழந்தைகளுடன் இணைந்து இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் 17 வது துவக்க விழாவையும் ,குடியரசு தின விழாவையும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 
இந்த முப்பெரும் விழாவில் குழந்தைகள் சிறப்பாக நடனம் ஆடி மகிழ்ந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். நடனம் ஆடிய குழந்தைகள் அனைவருக்கும் பேனா பரிசளிக்கப்பட்டது.இதில் பெற்றோர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர்கள் புஷ்பா, காயத்ரி, கல்பனா, சகிலாதேவி, மகேந்திரவர்மன் மற்றும் ஆனந்த, ஹரிஷ்குமார் நண்பர்கள் கலந்துக்கொண்டார்கள்


செய்திகள் புகைப்படங்கள் :அல்லாபக்ஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,