கருப்புக்கொடி காட்டியதற்கு ரவீந்திரநாத்குமார் எம்.பி கண்டனம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. வாக்களித்ததை கண்டித்தும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் அவருக்கு முஸ்லிம் அமைப்பினர் கருப்பு கொடி காட்டவும் திட்டமிட்டு இருந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து கம்பம் தபால் நிலையம், போக்குவரத்து சிக்னல், பார்க் திடல் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டனர்.

 

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த இடத்துக்கு ரவீந்திரநாத்குமார் எம்.பி. தனது காரில் வந்தார். அவர் காருக்கு பின்னால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளின் கார்கள் வந்தன.

 

அப்போது திடீரென சூழ்ந்த முஸ்லிம்கள் சிலர் கையில் கருப்பு கொடியுடன் அங்கு வந்து எம்.பி.யின் காரை முற்றுகையிட்டனர். 

 

மேலும் எம்.பி.யை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது திடீரென சிலர் அவரது காரை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து முஸ்லிம்கள் அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முஸ்லிம்கள் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,