கூட்டுறவு நியாயவிலைக்கடையில் பொங்கல்பரிசு தொகுப்பும் பரிசுத்தொகையும்

    பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.


பின்னர் ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது.மேலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உள்ள நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.


  சென்னை கொளத்துர் பூம்புகார் நகருக்கான முருகன் நகரில் அமைந்துள்ள சிந்தாமணி கூட்டுறவு நியாயவிலைக்கடையை பார்வையிட்டபோது


பொதுமக்கள் வரிசையில்  நின்று அமைதியாக பெற்று சென்றனர்


மற்றும் அரசு அறிவித்தபடி பொங்கல்பரிசு தொகுப்பும் பரிசுத்தொகையும்


எந்தவித இடர் பாடின்றி பெறுகிறோம் எனவும் தமிழகஅரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்



புகைபப்டம்‘வீடியோ


செய்தியாளர் :அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,