தியாகராஜருக்கு இசை அஞ்சலி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது, தியாகராஜர் சமாதி. இங்கு வருடம் தோறும் தியாகராஜருக்கு ஆராதனை விழா விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் 173 வது ஆராதனை விழாவை. கடந்த 11 ம் தேதி மாலை, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்தார்.


                         இதையடுத்து, தினமும் பல்வேறு இசைகலைஞர்களின் இசை கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து 5 நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் முக்கிய நிகழ்வான ஆராதனை விழா, இன்று15.01.2020 நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைகலைஞர்கள் கூடி தியாகராஜர் சமாதி முன் அமர்ந்து காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்தின கீர்த்தனை பாடினர்.


                   பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடலும், இதைத் தொடர்ந்து, கெப்ளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக நகவஸந நிந்நு , ஸ்ரீராகம்,ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு உள்ளிட்ட 5 வகையான கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.


 


இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், பாபநாசம் அசோக் ரமணி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் ஒருமித்த குரலில் பாடல் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,