பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்
வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அகமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி என்ற டிசைனிங் நிறுவனம் முக்கோண வடிவத்தில் கட்டுவதற்கான மாதிரி வரைப்படத்தை தயார் செய்துள்ளது.இந்த கட்டிடம் தற்போதுள்ள பாராளுமன்ற வளாகத்துக்கு அடுத்ததாக அமையும் என கூறப்படுகிறது. இதில் மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரு சபையின் 900 எம்.பி.க்கள் அமர்வதற்காகவும், 1,350 எம்.பி.க்களுக்கு இருக்கை வசதி செய்வதற்காகவும் ஏற்றதாக கட்டப்படுகிறது.
Comments