சொர்க்கவாசல்

                      வைகுண்ட ஏகாதசி விழா ஸ்பெஷல்

ஸ்ரீரங்கம் கோவில் தாயார்சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்றுவாசல் பற்றிய விளக்கம்
பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை ஆவலுடன் பார்கிறாள் என கூறுவது வழக்கம்.

ஆனால் இந்த இடத்தின் தாத்பர்யம் வேறு:

1. ஸ்ரீரங்கம் தாயார் படி தாண்டாப் பத்தினி. எனவே வெளியே வந்துபார்த்திருக்கச் சாத்தியமில்லை.

2. பெருமாள் இவ்வழியில் தாயார் சன்னதிக்கு வருவது வழக்கம் இல்லை. ஒருநாள் மட்டுமே இந்த வழியாக எழுந்தருள்வார். மற்ற நேரங்களில் ஆழ்வான் திருசுற்று (5வது பிரகாரம்) வழியாகத்தான் எழுந்தருள்வார்.

இந்த ஐந்து குழி அர்த்தபஞ்சக ஞானத்தைக் குறிப்பதாகும். மூன்று வாசல்
தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும்.
தத்வத்ரயம் என்பது சித், அசித், ஈஸ்வர தத்துவம். அர்த்தபஞ்சகம் என்பது

(1) அடையப்படும் பிரம்மம்
(2) அடையும் ஜீவன்
(3) அடையும் வழி
(4)அடைவதால் ஏற்படும் பயன்
(5) அடைவதற்கு உள்ள தடைகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

இந்த ஐந்து குழிகளில் ஐந்துவிரல்களை வைத்துத் தெற்குப் பக்கம் பார்த்தால் பரமபதவாசல் தெரியும்.
ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவை இந்தத் தத்துவங்களைக் கொண்டு அடைந்தால் அந்த
ஜீவாத்மாவுக்குப் பரமபதம் நிச்சயம் என்பதுதான் இதன்பொருள்
===========================================================================
                 ஓம் நமோ நாராயணா !வைகுந்தத்தில் வாசம் செய்யும் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தினத்தில் விரதமிருந்து வழிபடும் பக்தர்களுக்கு மூன்று கோடி தேவர்கள் சூழ வந்து அருளும் தினம் வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. திருமாலின் சக்தி ரூபத்தை ஏகாதசி திதியில் மார்கழி மாதத்தில் வணங்கினால் வைகுந்த பதவிக்கு நிகரான அளவில்லா செல்வம், புகழ், கல்வி, ஞானம், இன்பம் பெற்று வாழ்வார் என்பது உண்மை


               . ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. அந்த நாளில் நாமும் நம்முடைய கர்மேந்தி ரியங்கள் ஐந்து, ஞானேந்தி ரியங்கள் ஐந்து, மனம் ஒன்று- ஆக இந்தப் பதினொன்றையும் பகவானோடு ஒன்றச் செய்ய வேண்டும். இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பது தான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள்.


           அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்! சரணாகதி மனோபாவத்தோடு, ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஒன்றினால் பிறவிப்பிணியை அறுத்து நிச்சயம் நமக்கு பெருமாள் முக்தி தந்து சொர்க்கத்துக்கு வழிகாட்டுவார். எனவே சொர்க்கவாசலை கடக்கும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.


 


----மஞ்சுளா யுகேஷ்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,