முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.








 

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி பேட்டிங் செய்தது. இறுதியில்  49.1 ஓவர்களில் இந்திய அணி அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்களை எடுத்தது. இதனை தொடர்ந்து 256 ரன்கள் வெற்றி இலக்காக  நிர்ணயிக்கப்பட்டது.

 

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கத் தொடங்கினர்.

 

பின்னர் அபாரமாக விளையாடிய  ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவர்களில் 258 ரன்களை எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. டேவிட் வார்னர் 128 ரன்களும் (112 பந்துகள்) மற்றும் ஆரோன் ஃபின்ச் 110 ரன்களும் (114 பந்துகள்) எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,