ஒலியும் ஒளியும் தொடர் பருத்தியெடுக்கையிலே

ஒலியும் ஒளியும்( தொடர்)


 


ஒலியும் ஒளியும் தொடர்


பகுதி   ( 4 )


பாடல் :பருத்தியெடுக்கையிலே  


ஆட்டுக்கார அலமேலு பாடல் பருத்தியெடுக்கையிலே எனை பலநாளா பார்த்த மச்சான்....பாடல் இளமை ததும்பும் ஸ்ரீப்ரியாவின் முகமும், கன்னத்துக் குழியில் விரியும் சிரிப்பும் சிவகுமாரின் இயல்பான நடிப்பும் என ரசனை மிகுந்த பாடல், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் சுசிலா , டி.எம்.எஸ் பாடிய பாடல்..


  


 அப்போதும் இப்போதும் ஏன் எப்போதுமே ரசிக்கும்படியான ஒரு ரொமாண்டிக் பாடல் எப்போதும் மிருகங்களை வைத்தே படம் எடுப்பதால் தான் சில தோல்விகளை சந்திக்கிறோம். மற்ற படக் கம்பெனிகள் போல நாமும் சமூக படங்களை எடுக்கலாம் என்ற தன் மருமகனின் யோசனைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். தேவர். பல தடங்கலுக்குப் பின்தான் ஆட்டுக்கார அலமேலு படம் கையில் எடுக்கப்பட்டது..கோவையில் ஒரு தியேட்டரில் சிவக்குமார் நடித்த படத்தைப் பார்த்ததும் அவரின் நடிப்பு பிடித்துப்போய் தேவர் அவரை வரவழைத்தார் ஆட்டுக்கார அலமேலு திரைப்படத்தின் கதாநாயகன் ஆனார். அப்போதே 50 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், இந்தப்படம் அவரின் நடிப்புக் கேரியரில் மிகவும் முக்கியமானது. என்றார் சிவக்குமா.ர். அதிலிருந்தே தேவரின் குடும்பத்தில் ஒருத்தராகிப் போனாராம்சிவக்குமார். கதாநாயகன் ரெடி கதாநாயகி யார் என்ற கேள்வி எழ,அப்போதைய பீக் ஆர்ட்டிஸ்ட் படாபட் ஜெயலட்சமிதான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது ஆனால் தேவரின் பார்வையோ துறுதுறுவென்ற முகமும் குறும்பும் கொப்பளித்த ஸ்ரீப்ரியாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவரின் இயற்பெயர் அலமேலு என்பதற்காகவே ஸ்ரீபிரியாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.. அதுவரையில் சிறுசிறு வேடங்கள் ஏற்றுக் கொண்டு இருந்த அவருக்கு கதாநாயகி அந்தஸ்து கிடைத்ததற்கும் இந்தப் படம் காரணம்..படத்தின் கதாநாயகன் சிவகுமார் கூட இந்தப் படத்தில ஆடு வில்லனை துரத்துது, குற்றங்களைக் கண்டுபிடிக்குது சண்டை போடுது என்னை விட அதுக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று சொல்லிச் சிரிப்பாராம். படப்பிடிப்பின் போது, ராமு என்கிற அந்த ஆடு எதிர்பார்ப்புகளையும் தாண்டி நடித்திருந்தது..


 


இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு 15 படங்களுங்கு மேல் சிவக்குமார் ஸ்ரீப்ரியா நடித்திருந்தாலும் அவர்களுக்குள் அத்தனை இணக்கம் இருந்ததில்லையாம். ..காட்சியில் காதலில் உருகினாலும் கட் சொன்ன பிறகு இரண்டு பேரும் ஒரு ஹலோ கூட சொல்லிக்கொண்டதில்லையாம் .ஆனால் பதினைந்து படங்களுக்கு மேல் நடித்திருக்கிறோம் அப்போது எல்லாம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் களத்தில் காட்டுவதில்லை என்று ஸ்ரீபிரியா ஒரு பேட்டியில சொல்லியிருக்கிறார்.சூப்பர் டூப்பர் ஹிட்டான பருத்தியெடுக்கையிலே பாடலோடு நாமும் அடுத்த பாடலில் சில தகவல்களோடு ரசிப்போம். 


---லதா சரவணன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,