ஜீனா அகர் ராணுவ மந்திரியாக பதவியேற்பு

லெபனான் நாட்டில் பிரதமராக இருந்து வந்த சாத் ஹரிரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவி விலகினார்.

அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் புதிய பிரதமராக பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் ஹசன் டயப்பை அதிபர் மைக்கேல் அவுன் நியமித்தார். புதிய பிரதமர் ஹசன் டயப் தனது புதிய அரசை நேற்று முன்தினம் அமைத்தார்.முந்தைய சாத் ஹரிரி அரசில் 30 மந்திரிகள் இடம்பெற்றிருந்த வேளையில், இப்போது ஹசன் டயப்பின் புதிய அரசில் மந்திரிகள் எண்ணிக்கை 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். 5 பேரில் ஒருவரான ஜீனா அகர், ராணுவ மந்திரி பதவி ஏற்றுள்ளார். இவர் துணைப் பிரதமராகவும் பதவி வகிப்பார். லெபனான் வரலாற்றில் ராணுவ இலாகாவுக்கு பெண் ஒருவர் மந்திரி ஆகி இருப்பது இதுவே முதல் முறை.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,