பனிமூட்டம் ரயில்கள் தாமதம்
டெல்லி, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் கடுமையாக காணப்படுகிறது. பனி மூட்டத்தால் சில மீட்டர் தொலைவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். 
பனிமூட்டம் காரணமாக 19 ரெயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் இன்று காலை வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரி செல்சியசாக பதிவானது
Comments