முதல்வரின் கிரிக்கெட் விளையாட்டு
*பேட்டிங்கில் அசத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
_அகில இந்திய குடிமைப் பணி மற்றும் மத்தியப் பணி அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். வெள்ளை நிற பேன்ட், சட்டையுடன் மைதானத்துக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேட்டிங் செய்தார். மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பந்துவீச்சில், இரண்டு பந்துகள் பேட்டிங் செய்து போட்டியை அவர் தொடங்கிவைத்தார்._
Comments