ரஜினி இமேஜை மேலும் பில்டப் செய்யும் வேலை
பல்வேறு சாகசநிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் டிஸ்கவரிசேனல் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியின் நாயகன் அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து எவ்வாறு உயிர்தப்புவது, அங்கிருந்து வெளியேறுவது குறித்து விளக்கமாக சொல்லித்தருகிறார்.
இது போன்ற மற்றொரு நிகழ்ச்சியில் ரஜினிகலந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலம் பந்திபோராபுலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 2 நாள்கள் நடக்கும் படப்பிடிப்பில் நடிகர் ரஜினி, நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர்கிரில்ஸ் உடன் பங்கேற்கிறார். அவருடைய இமேஜை மேலும் பில்டப் செய்யும் வேலைகளில் இதுவும் ஒன்று என பேசப்படுகிறது.
Comments