அவள் அப்படிதான் தமிழ் சினிமாவின் புதிய முயற்சி

காவியமான கருப்பு வெள்ளை திரைப்படங்கள் ---அவள் அப்படிதான்


அந்நியமான, புதிய முயற்சி            தமிழ் சினிமா முழுமையாக வண்ணத்துக்கு மாறிக் கொண்டிருந்த தருணத்தில், தன் முதல் படத்தை கறுப்பு வெள்ளையில் தந்தார் ருத்ரய்யா. அன்று முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்த ரஜினி, கமல் (அன்றைய தேதிக்கு கமல் - ரஜினி என்ற வரிசைதான்!) ஸ்ரீப்ரியா, சிவச்சந்திரன் என பாத்திரங்களுக்கேற்ப தேர்வு செய்திருந்தார்.இறுதிக் காட்சி, ரஜினி காரை ஓட்டிக் கொண்டிருப்பார். பின்னிருக்கையில் புதுமணத் தம்பதிகள் கமல் - சரிதா. உடன் ஸ்ரீப்ரியா. சரிதாவைப் பார்த்து 'பெண்ணுரிமை பத்தி என்ன நினைக்கிறீங்க?' என்று கேட்பார் ஸ்ரீப்ரியா.
பதிலுக்கு 'ஓ.. எனக்கு அதப் பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது' என்பார் சரிதா.
'ஆச்சர்யமே இல்ல.. நீங்க சந்தோஷமா இருப்பீங்க!' என்று கூறிவிட்டு இறங்கிக் கொள்வார் ஸ்ரீப்ரியா.
'மீண்டும் ஒரு முறை இறக்கிறாள். இருப்பினும் அவள் மீண்டும் பிறப்பாள். அவள் அப்படித்தான்..' என்ற வாய்ஸ் ஓவருடன் படம் முடியும்!அன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே அந்நியமான, புதிய முயற்சி இந்தப் படம். தோல்வியைச் சந்தித்தது. ஆனால் பின்னாட்களில் மறுவெளியீடாக வந்து வெற்றிப் பெற்றது.
இந்தப் படத்தை 100 மறக்க முடியாத இந்திய சினிமாக்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து கவுரவித்தது ஐபிஎன் தொலைக்காட்சி


இந்த படத்தைப்பற்றிய ஒரு வீடியோ


தயாரிப்பு ,எடிட்ங்,,,ஆக்கம்   :உமாகாந்தன்


ஒவியம் :ஜீவானந்தம்


வர்ணனை: மா.இலட்சுமிComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,