மோகன்லாலும், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும்

                கேரளாவை சேர்ந்த ஏ.எம்.நாயர் என்ற அய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் ஓட்டல் நடத்தி இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வெளிநாடுகளில் ஆதரவு திரட்டினார். . இவரை நாயர் ஸான் என்று அழைத்தனர்.




 

இவரது வாழ்க்கையை மலையாளத்தில் சினிமா படமாக  தற்போது எடுக்கப்படுகிறது .. இதில் மோகன்லாலும், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும் இணைந்து நடிக்கின்றனர்.

 

இந்த படத்துக்கு நாயர் ஸான் என்று பெயர் வைத்துள்ளனர். ஆல்பர்ட் ஆண்டனி இயக்குகிறார். இவர் ஏற்கனவே நவ்யா நாயர் நடித்த கண்ணே மடங்குகா, ராகுல் மாதவ் நடித்த வாடா மல்லி ஆகிய படங்களை இயக்கியவர். மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கும் ராம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் நாயர் ஸான் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.

 

மோகன்லால் அய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ரூ.400 கோடி செலவில் தயாராகிறது. ஜாக்கிசான் நடிப்பதால் படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி