ஹரிவராசனம் பெற்ற இளையராஜா

 


கேரள அரசின் ஹரிவராசனம் விருதுக்கு இளையராஜா தேர்வு செய்யப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இசையில் பெரிய பங்களிப்பை செய்தவர்களுக்கு 2012-ம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல் தடவையாக பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் இந்த விருதை பெற்றார்.எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோரும் ஹரிவராசனம் விருதை வாங்கி உள்ளனர். கடந்த ஆண்டு பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கும் விழா சபரிமலை சன்னிதான வளாகத்தில் நடந்தது. இதில் கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் கலந்து கொண்டு இளையராஜாவுக்கு விருது வழங்கினார்.
 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,