நான் புதியவன் அல்ல



         இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.






           ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற ஆயத்தமானார். அப்போது அவர் அனைவருக்கும் வணக்கம். எம்எல்ஏக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் என தமிழில் கூறினார். அப்போது அரங்கில் இருந்தவர்கள் கை தட்டி வரவேற்றனர்.








 





            இதையடுத்து ஆளுநர் தனது பேச்சை தொடர்ந்தபோது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்குமாறு கோரினர். அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்தார்.




 



எனினும் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் தனது கோரிக்கையை கூறினார். . இதையடுத்து ஆளுநர் பேசுகையில்


ஙசட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒரு வேண்டுகோள்.



  நான் புதியவன் அல்ல. இங்கு வந்து இரு ஆண்டுகள் ஆயிற்று. எனக்கு எல்லாம் தெரியும். நீங்கள் சிறந்த பேச்சாளர். ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவதற்காகத்தான் இந்த சட்டசபை. நீங்கள் உங்கள் பேச்சுத் திறமையை விவாதத்தின் போது பயன்படுத்தி கொள்ளுங்கள் ஙஎன்றார்.

          இதை கேட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைதட்டி ஆரவாரம் செய்ய ஆளுநர் உரையை திமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,