வாழை வாழ வைக்கும்
வாழை வாழ வைக்கும்.
வாழை இலை பற்றி சில விஷயங்கள்
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,சாப்பிடும் முன் ... ஒரு குழப்பம் வந்தே தீரும். பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?
சிம்பிளாக சொன்னால். இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும். நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..
. சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..? . உப்பு, ஊறுகாய், இனிப்பு . இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு
. சாதம் , காய் கறிகள் இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும். . இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா என்றால் இல்லை. இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது .
அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது. . இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது என எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது . ஆனால் இவை எல்லாவற்றையும் (ஃபாஸ்ட் புட்) அவசர உணவு கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி , அடிமைகளாகிக் கொண்டிருப்பவர்கள் மாற வேண்டும்
பசி உணர்வு மன அழுத்தங்கள் அதிகம் இருக்கும் நபர்களுக்கும், உடலில் ஏற்படும் சத்துக் குறைபாடுகள் காரணமாகவும் ஒரு சிலருக்கு பசி உணர்வே இல்லாமல் போகிறது. வாழையிலையில் அடிக்கடி உணவு சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பசி உணர்வு நன்கு தூண்டப்பட்டு, நன்றாக சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. சாப்பிடப்படும் எப்படிப்பட்ட ஒரு உணவுப் பொருட்களும் சுலபமாக செரிமானம் ஆகவும் வழிவகை செய்கிறது.
இக்காலத்தில் நாம் உணவு சாப்பிடும் தட்டுக்கள் போன்றவை பல ரசாயன முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்த தட்டுக்கள் நெடுநாட்களாக சாப்பிடுபவர்களுக்கு உடலில் சிறிய அளவில் குறைபாடுகள் ஏற்படலாம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் தினமும் வாழை இலையில் சாப்பிட்டதால் உடலில் எவ்விதமான நோய்களுமின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். எனவே தினமும் வாழையிலையில் உணவு சாப்பிடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், சுலபத்தில் நோய் ஏற்படாத தன்மையும் உருவாகும். சரும நலம் வயது செல்லச் செல்ல அனைவருக்குமே தோலில் ஈரப்பதம் குறைந்து, வறட்சி தன்மை ஏற்பட்டு, தோலில் சுருக்கங்கள் உண்டாகி வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். தினந்தோறும் மூன்று வேளையும் வாழை இலையில் உணவு சாப்பிடுபவர்களுக்கு தோலில் நீர் வறட்சி ஏற்படாமல், பளபளப்புத் தன்மை காக்கப்பட்டு, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து, எப்போதும் இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.
உணவு சத்துகள் வேலைக்கு செல்பவர்கள் மதிய உணவை உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்களில் எடுத்துச் செல்வதால் உணவில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, சத்துக்களின் இழப்பு உண்டாகின்றன. இதற்கு பதிலாக வாழை இலையில் தினமும் உணவை கட்டி எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கு உணவின் சத்துகள் குறையாமல், முழுவதுமாக கிடைக்க வழிவகை செய்கிறது.
மஞ்சுளாயுகேஷ்
Comments