கர்ணன் தனுஷ்
பா.ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் வெற்றி படத்தை டைரக்டு செய்து பிரபலமான மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பதாகவும் எஸ்.தாணு தயாரிப்பதாகவும் . இந்த படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைத்து இருப்பதாக தாணு சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார். “கர்ணன் அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல. வெற்றியையும் தருபவர்” என்றும் பதிவிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி உள்ளது. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் பற்றிய கதையம்சம் கொண்ட படமாக இது தயா ரா கிறது. இந்த படத்துக்கும் அசுரனைபோல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
Comments