சரிந்த வசூல் கலக்கதில் லைக்கா

தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில்9.01.2020 அ ன்று வெளியான திரைப்படம் தர்பார். 


தர்பார் திரைப்படத்தின் முதல் காட்சி காலை 4: 30 மணிக்கு வெளியானது ,முதல் காட்சி வெளியானது முதல் தர்பார் திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளிவரத் துவங்கின. அதன்படி தர்பார் திரைப்படத்தில் கதை என்று எதுவுமில்லை, இருப்பினும் ரஜினி காகவே இந்த படத்தை பார்க்கலாம் என பல ரஜினி ரசிகர்களே கூறுகின்றனர். குறிப்பாக ரசிகர் ஒருவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் “தர்பார் படத்தில் அனிருத் BGM மட்டுமே இருக்கிறது, அந்த BGMமை வைத்துக்கொண்டு ரஜினியை நடக்க விட்டு படத்தை எடுத்துள்ளார்கள்” என்றார்.


தர்பார் திரைப்படத்தின் முதல் காட்சி முடியும் முன்னரே தர்பார் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் என்ற பிரபல இணையதளத்தில் வெளியானது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை பொறுத்தவரை உலக சினிமாவில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் உடனுக்குடன் தங்கள் இணைய தளத்தில் பதிவேற்றுகின்றனர்.


தமிழ்ராக்கர்ஸ் பொறுத்தவரை அவர்கள் பல டொமைன் வைத்திருப்பதால் இணையதளத்திலிருந்து படத்தை நீக்குவது என்பது கடினமாக செயலே.  திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது, இருப்பினும் தடையை மீறி தர்பார் திரைப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.


250 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வரும் நிலையில் தமிழ்ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் படத்தை வெளியிட்டு இருப்பதும்  திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படுமென படக்குழு அஞ்சுகிறது. இந்த திரைப்படம் குறைந்தது 320 கோடியாவது வசூலித்தால் தான் லைக்கா நிவனத்திற்கு லாபம் கிடைக்கும்.


சந்தேகம்தான் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது 


.... ருத்ரா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,