திருத்துறைப்பூண்டியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

   24.01.2020  அன்று திருத்துறைப்பூண்டியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வணிக நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு இலட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ50,000 அபராதம் விதிப்பு.


               தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக்கை உபயோகிக்கும் வணிக நிறுவனங்கள் மீது நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன் படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுத்தபடுகிறதா என சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் ஒரு லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய பறிமுதல் செய்து ரூ.50,000அபதாரம் விதிக்கப்பட்டது


செய்தியாளர். பாலா
திருத்துறைப்பூண்டி


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,