ரஜினிகாந்துக்கு சாதகமாக வருமான வரித்துறையின் நடவடிக்கை

2002 முதல் 2005 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி தாக்கலில் இருந்த குறைபாடுகள் காரணமாக ரஜினிகாந்த்துக்கு 66,22,436 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்கைத் திரும்பப்பெறுவதாக, வருமான வரித்துறை அறிவித்தது. இதையடுத்து, ரஜினிகாந்த் மீதான வழக்கைத் தள்ளுபடிசெய்வதாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது


இந்த விவகாரத்தில், ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்ட விளக்கம்தான் தற்போது பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனக்கு வட்டித்தொழில் குறித்து தெரியாது என்றும், பொருளை அடமானம் வைத்து பணம் தருவதையே வட்டித் தொழில் என நினைத்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும், ``எனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே பணத்தைக் கடனாக வழங்கினேன். இது எப்படித் தொழிலாகும்" என்றும் கூறியுள்ளார். அதேவேளை, 18% வட்டிக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் அதில் ஒரு பகுதி வாராக்கடனாகிப் போனதாகவும் தெரிவித்துள்ளார். இவரது விளக்கத்தில், நெருங்கிய நண்பர்களுக்குப் பணம் வழங்கியது எப்படி தொழிலில் சேருமென்றும், இதை வியாபாரமாகச் செய்யவில்லை என்றும் விளக்கமளித்திருக்கிறார். அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை, அவர்மீதான வழக்கைத் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.


நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் பெறக்கூடிய கடன் என்பது சிறிய அளவில் இருக்கலாம். ஆனால், இங்கே கோடிக்கணக்கில் கொடுத்துள்ளார் என்றால் அதற்கு எந்த விதிமுறை அனுமதிக்கிறது? வருமான வரித்துறை மேல்முறையீட்டை விலக்கியுள்ள இன்றைய காலகட்டத்தையும், பெரியார் மீதான அவரது விமர்சனத்துக்கான காலகட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய கட்டாயம் வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்புதான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொண்டிருக்கிறார். உடனே, வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு வழக்கு விலக்கிக்கொள்ளப்படும் அறிவிப்பு வருகிறது.


பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்க நடவடிக்கைகளுக்குப்பின், சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் நெருக்கடிக்குள்ளாகிவருகின்றன. இன்னொரு பக்கம் பெரிய தொழிலதிபர்கள், வாராக் கடன்களை வைத்துவிட்டு வெளிநாடுகளில் செட்டிலாகிறார்கள். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் மத்திய அரசு இணக்கமாக நடந்துகொள்வது விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது


 


  .இந்தியாவின் மிக நெருக்கடி நிலையில்  மத்திய அரசோடு நேரடியாக இணக்கம் காட்டிவரும் ரஜினிகாந்துக்கு சாதகமாக, வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை கிளறுகிறது


இந்த கேள்விகளுக்கு பதில் காலம் தான் பதில் தரவேண்டும்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி