ரஜினிக்கு உதயநிதி பதிலடி


சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.  அவரின் கருத்துக்கு  எதிராக இணையத்தில் பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். இணையத்தில் இதனால் ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். திமுகவினர் பலர் ரஜினியின் கருத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர். முரசொலி வாசகர்களும் மிக கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
ரஜினி தனது பேச்சில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை. முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம்
பத்திரிக்கைகள் நடு நிலையுடன் செயல்பட வேண்டும். உண்மையில் பொய் என்ற தண்ணீரை கலக்க கூடாது. எது பால், எது தண்ணீர் என்று பத்திரிக்கையாளர்தான் சொல்ல வேண்டும்.என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.  இதற்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பதில் அளித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டில், முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள், என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,