செய்தியாளரின் கேள்விக்கு எச்சரிக்கையாகவே இருப்பவர்

ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் கலந்து கொண்ட போது பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அவரை குற்றஞ்சாட்டினார்

 

 ரஜினியை விமர்சனம் செய்து ஓய்ந்து விட்ட நிலையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் இந்த பிரச்சினை குறித்து கூறியதாவது:

 



பெரியார் என்பவர் பகுத்தறிவு பகலவன். அவர்தான் எங்களுக்கு அரசியல் வழிகாட்டி. தமிழக அரசியலில் அவர் மிக முக்கியமானவர். பெரியார் கருத்துக்கள்தான் தமிழக அரசியலில் இப்போதும் முக்கியமானதாக உள்ளது. அனைவரும் பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


 


 



 

1971ம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இந்து கடவுளான ராமர் இழிவுப்படுத்தப்பட்டதாக ரஜினி கூறியுள்ளார். அப்படி ரஜினி பேசி இருக்க கூடாது. பெரியார் பற்றி பேசுவதை ரஜினி தவிர்த்திருக்கலாம். எப்பொழுதுமே ரஜினி செய்தியாளரின் கேள்விக்கு எச்சரிக்கையாகவே இருப்பார். ஆனால் இந்த முறை அவசரப்பட்டு இப்படி பேசிவிட்டார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,