பாமகவின் மிக பெரிய சாதனை

   தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் திமுக மாபெரும் வெற்றியை பெற்று, வெற்றி கூட்டணியாக திகழ்கிறது. அதிமுகவும் அதிக இடங்களை வென்று ஆபாரமாக வென்றுள்ளது.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 36 மாவட்ட ஊராட்ச்சி பதவிகளில் போட்டியிட்டு 16 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாமக நன்றாகவே செயல்பட்டுள்ளது.இந்த தேர்தலில் மற்ற கட்சிகளை விட பாமகவின் வெற்றி விழுக்காடு தான் அதிகம். பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட இடங்களில் 52.09 விழுக்காட்டு இடங்களை வேண்டுறள்ளது. கட்சி மீது மக்கள் வைத்து இருக்கும் தீவிர ஆதரவை இந்த வெற்றி காட்டுகிறது.மாவட்ட ஊராட்சிகளைப் பொறுத்தவரை களமிறங்கிய இடங்களில் 44.44% இடங்களில் வெற்றி வாகை சூடியிருக்கிறோம். பாமக தொடர்ந்து தமிழகம் முழுக்க வளர்ந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் அதிமுக தலைமையிலான அணி அதிக இடங்களை வென்றுள்ளது.அதிமுக வென்ற இடங்களை விட திமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மெல்லிய அளவில் தான் அதிகமாகும். இது மிகப்பெரிய வெற்றி என்பதில் சந்தேகமில்லை. இன்னும் சில இடங்களில் முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. அப்போது வெற்றி விழுக்காடு உயரும்.உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அதன் செல்வாக்கையும், வலிமையையும் ஒப்பிடும் போது மிகவும் குறைவான இடங்களில் தான் போட்டியிட்டது. இதில் பெரிய வித்தியாசமாம் இல்லை. ஒருவேளை அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால் அதிமுக அணி தான் முதலிடம் பிடித்து இருந்திருக்கும்.


 


 


திமுகவிற்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையாக திகழும் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். நடைபெற்று முடிந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.


எங்களுக்கு ஆதரவு அளிக்க வாக்காள பெருமக்களுக்கு நன்றி. தமிழகத்தில் பாமகதான் மூன்றாவது பெரிய கட்சி, பாமகவின் வெற்றிக்கு உழைத்த அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,